Thursday, January 28, 2010

உள் பொதிந்த பாரங்கள்
கனக்க,
ரணமோ ,ஜீவிதமோ
பரத்தலுகாகவேனும் விட்டு வைக்க பட்டிருக்கலாம்
றெக்கைகள்.
முகமூடி அணிந்தே
அதையும் வெளிபடுத்தவேண்டி
இருக்கிறேன் .
தொடரும் சாட்சியாக ....
சுயத்தை பின்னால் ஒளித்து.

Monday, October 5, 2009

நீண்டதொரு இசையின் பயணம்

சரியாக சொல்வதென்றால் என்னுடைய இசை பற்றிய அறிவு சராசரிக்கும் மிக குறைவான அறிவேயாகும் . இசை பற்றிய எந்தவொரு நுண்ணிய சங்கதிகளும் அறிந்திடாத ஒரு சாமான்ய ரசனை கொண்ட ரசிகனாகவே சிறு வயதிலிருந்து இசை கேட்டு வருகிறேன் .பதின்வயதுகளில் கேட்க்க தொடங்கிய இசையானது , வெகு காலத்துக்கு இளையராஜா என்ற ஒரு கலைஞனை சுற்றியே ஒரு இசைதட்டை போல சுற்றி வந்துள்ளது, ஒரு மழை நாளில் சூடான தேநீருடன் ஜன்னலோரம் அமர்ந்து அவரது அந்திமழை பொழிகிறது பாடலை கேட்பதுபோன்ற நிறைவை அளிக்கிறது . அவருடைய பாடல்களை வெறும் பாடல்களாக எண்ண

Thursday, October 1, 2009


மேலும் ஒரு சம்பவமாக இதை எண்ண முடியவில்லை . அசோக் நகரில் கடந்த வாரம் அனந்தலட்சுமி என்ற பெண்ணும் அவரது மகனும் பூட்டிய வீட்டினுள் கொலை செய்யப்பட்டு கிடந்த செய்தி பற்றி முதலில் படித்த போதே , உள்ளுக்குள் இது மேலும் ஒரு கள்ள காதல் விவகாரமாக இருக்க கூடும் என தோன்றியது . இப்போது விசாரணையில் தெரிய வரும் சேதிகள் அதை நோக்கியே செல்கின்றன .


பெண்ணகளின் பாலியல் சார்ந்த பிறழ்வுகளுக்கு காரணம் கண்டரிய வேண்டிய மிக முக்கியமான தருணத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது . ஆண் வர்க்கம் மீண்டும் மீண்டும் தங்களது பாலியல் வக்கிராங்களுக்குபகடை காயாகவே பெண்களை உருட்டும் அவல நிலை தொடர்கிறது .ஆண் பெண் குடும்ப உறவின் சிக்கல்கள் பெரும்பாலான நேரங்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை அடிபடையாக கொண்டே கட்டமைக்கப்படுகின்றன .இந்த எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் நம் வீட்டுக்குளேயே சுதந்திரமாக நாம் அனுமதிக்கும் சீரியல்கள் வாயிலாக ஆண் பெண் உறவு பற்றி நீதி போதனைகள் மதியம் ஆரம்பித்து இரவு வரை நியாயப்படுத்த படுகின்றன .இதை தாண்டி இன்றைய தொழில் நுட்ப புரட்சிகளான செல் போன் , இணையம் எவ்வித பாரபட்சமுமின்றி தங்கள் சேவைகளை வாரி வழங்குகின்றன .முடிவு இதுமாதிரியான அபத்தமான உயரிழப்புகளில் சென்று முடிகிறது

Wednesday, September 30, 2009

கடந்த ஓராண்டாகவே எழுத வேண்டும் என்ற ஆசை .இது துவங்கியத் தருணம்எதுவென்று சரிவர அனுமானிக்க முடிய வில்லை ...கல்லூரி காலங்ககளில்முதன் முதலாக இலக்கிய பரிட்சயம் ஏற்பட்ட நேரங்களை நினைவு கூர்கிறேன் . கல்லூரியின் தமிழ் துறை ஆசிரியர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள் . தளபதி, பச்சியப்பன் , ரவிக்குமார் , மதியழகன் போன்றோர் என்னையும் என்நண்பன் ரகுவையும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தினர் . அதுவரை, வைரமுத்துவின் கவிதை தொகுதியான 'இந்த பூக்கள் விற்பனைக்கல்ல மற்றும்அவரின் இன்ன பிற கவிதை தொகுப்புக்களே ஆதர்ச கவிதைகளாக ,அவரைகொண்டாடி மகிழ்ந்த காலங்கள் .
கல்லூரி சேர்ந்த பொழுதில் ஒரு விதமான கலக்கத்திற்கு ஆட்பட்டு மனம்முடங்கி கிடந்த நேரங்கள் அவை . தஞ்சாவூரின் சூழ ழுக்கும் மனிதர்களுக்கும்பழக்கப்பட்ட என்னை சென்னையின் கல்லூரி ஒன்றில் முதலில் பொருத்திபார்க்கவே சிறிது காலம் பிடித்தது.அவ்வாறான காலங்களில் நட்பு வட்டம்என்பதும் இல்லை . ஒருவாராக மனம் தேடி தேடி தன்னை குடியமர்த்திகொண்டஇடம் கல்லூரியின் நூலகம் .நன்றாக நினைவிலுள்ளது என்ன புத்தகத்தைபடிக்கலாம் (பார்க்கலாம் ) என்று இப்படியும் அப்படியுமாக அலைந்துகொண்டேஇருந்ததில் கண்ணில் பட்டது ஒரு புத்தகம் .ஏன் என்று தெரியவில்லை நான்பொதுவாகவே சற்று அழகியலுக்கு முக்கியத்துவம் தருபவன், அப்படியான எந்தஒரு அழகான அட்டை வடிவமைபும்மின்றி இருந்த அந்த புத்தகத்தின் மேல்சென்று என் பார்வைகள் குவிந்தன .ஒருவேளை அந்த எழுத்தாளனின் பெயர்என்னை கவர்ந்ததோ என்னவோ தெரியவில்லை .வகுப்பாசிரியர் வராத காரணத்தால் நேரத்தை கொல்ல வேண்டிய கட்டாயம் வேறு
சரியென்று புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்
அந்த எழுத்து என்னவோ செய்தது உள்ளூரஒரு வித பரவசம், புது மாதிரியான வாசிப்பனுபவம் அந்த கதாநாயகனுக்கு பசித்தபோது எனக்கும் பசித்தது அவன் குளிரில் நடுங்கியபோது எனக்கும் குளிறிற்று.இதுதான் நான் தேடியது என்று உள்ளூர மனம் கொண்டாட தொடங்கியது .அப்படிஎன்னை பாதித்த எழுத்தாளன் மாபசன். புத்தகம் மாபசன் சிறுகதைகள் . அதன் பிறகு தேடல் தொடங்கியது ..ரஷ்ய இலக்கியங்கள் குறிப்பாகஸ்தெப்பி புல்வெளிகள் மஸ்கொவ் நகர வீதிகள் என வசீகரிப்பு அதிகமானதுஅதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியத்தின் வேர் என்னுள் கிளை பரப்பிஎன்னை முழுதாய் வியாபித்து கொண்டது.அதன் பிறகு புதுமைபித்தன், ஜெயகாந்தன் ,மௌனி , ஆண்டாள் , நெருடா, சொல்ல சொல்ல நீளும் பெயர் வரிசை . ஆகவே இனிமேல் இந்த பக்கங்களில்என்னை பாதித்த புத்தகமோ ,திரை படமோ, இசையோ ..இன்னும் எதெல்லாம்மனதுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவைகளை இங்கே பதிவு செய்யபோகிறேன் .இது ஒரு ஆரோக்யமான கருத்து பகிர்வாக இருக்க நீங்களும் உங்கள்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன் . நன்றி .