Wednesday, September 30, 2009

கடந்த ஓராண்டாகவே எழுத வேண்டும் என்ற ஆசை .இது துவங்கியத் தருணம்எதுவென்று சரிவர அனுமானிக்க முடிய வில்லை ...கல்லூரி காலங்ககளில்முதன் முதலாக இலக்கிய பரிட்சயம் ஏற்பட்ட நேரங்களை நினைவு கூர்கிறேன் . கல்லூரியின் தமிழ் துறை ஆசிரியர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள் . தளபதி, பச்சியப்பன் , ரவிக்குமார் , மதியழகன் போன்றோர் என்னையும் என்நண்பன் ரகுவையும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தினர் . அதுவரை, வைரமுத்துவின் கவிதை தொகுதியான 'இந்த பூக்கள் விற்பனைக்கல்ல மற்றும்அவரின் இன்ன பிற கவிதை தொகுப்புக்களே ஆதர்ச கவிதைகளாக ,அவரைகொண்டாடி மகிழ்ந்த காலங்கள் .
கல்லூரி சேர்ந்த பொழுதில் ஒரு விதமான கலக்கத்திற்கு ஆட்பட்டு மனம்முடங்கி கிடந்த நேரங்கள் அவை . தஞ்சாவூரின் சூழ ழுக்கும் மனிதர்களுக்கும்பழக்கப்பட்ட என்னை சென்னையின் கல்லூரி ஒன்றில் முதலில் பொருத்திபார்க்கவே சிறிது காலம் பிடித்தது.அவ்வாறான காலங்களில் நட்பு வட்டம்என்பதும் இல்லை . ஒருவாராக மனம் தேடி தேடி தன்னை குடியமர்த்திகொண்டஇடம் கல்லூரியின் நூலகம் .நன்றாக நினைவிலுள்ளது என்ன புத்தகத்தைபடிக்கலாம் (பார்க்கலாம் ) என்று இப்படியும் அப்படியுமாக அலைந்துகொண்டேஇருந்ததில் கண்ணில் பட்டது ஒரு புத்தகம் .ஏன் என்று தெரியவில்லை நான்பொதுவாகவே சற்று அழகியலுக்கு முக்கியத்துவம் தருபவன், அப்படியான எந்தஒரு அழகான அட்டை வடிவமைபும்மின்றி இருந்த அந்த புத்தகத்தின் மேல்சென்று என் பார்வைகள் குவிந்தன .ஒருவேளை அந்த எழுத்தாளனின் பெயர்என்னை கவர்ந்ததோ என்னவோ தெரியவில்லை .வகுப்பாசிரியர் வராத காரணத்தால் நேரத்தை கொல்ல வேண்டிய கட்டாயம் வேறு
சரியென்று புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்
அந்த எழுத்து என்னவோ செய்தது உள்ளூரஒரு வித பரவசம், புது மாதிரியான வாசிப்பனுபவம் அந்த கதாநாயகனுக்கு பசித்தபோது எனக்கும் பசித்தது அவன் குளிரில் நடுங்கியபோது எனக்கும் குளிறிற்று.இதுதான் நான் தேடியது என்று உள்ளூர மனம் கொண்டாட தொடங்கியது .அப்படிஎன்னை பாதித்த எழுத்தாளன் மாபசன். புத்தகம் மாபசன் சிறுகதைகள் . அதன் பிறகு தேடல் தொடங்கியது ..ரஷ்ய இலக்கியங்கள் குறிப்பாகஸ்தெப்பி புல்வெளிகள் மஸ்கொவ் நகர வீதிகள் என வசீகரிப்பு அதிகமானதுஅதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியத்தின் வேர் என்னுள் கிளை பரப்பிஎன்னை முழுதாய் வியாபித்து கொண்டது.அதன் பிறகு புதுமைபித்தன், ஜெயகாந்தன் ,மௌனி , ஆண்டாள் , நெருடா, சொல்ல சொல்ல நீளும் பெயர் வரிசை . ஆகவே இனிமேல் இந்த பக்கங்களில்என்னை பாதித்த புத்தகமோ ,திரை படமோ, இசையோ ..இன்னும் எதெல்லாம்மனதுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவைகளை இங்கே பதிவு செய்யபோகிறேன் .இது ஒரு ஆரோக்யமான கருத்து பகிர்வாக இருக்க நீங்களும் உங்கள்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன் . நன்றி .

No comments:

Post a Comment